Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்..! மின்சாரம் தாக்கி இறந்த உயிர்… காவல்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே சினை பசுமாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதூரில் வினோத்குமார் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் எட்டு மாத சினையான பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த பசு மாடு அதே பகுதியில் உள்ள எம்.எஸ்.எம்.பி. சாலையில் கடந்த 1-ஆம் தேதி மாலையில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பசுமாடு அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மீது மிதித்துள்ளது. அதில் மின்சாரம் தாக்கி அந்த மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது. இது குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |