போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி பகுதியில் அடிக்கடி மணல்கொள்ளை நடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஷ் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து தப்பியோடிய உமாமகேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.