சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது.
எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் நேரத்தை போக்க மெதுவாக மென்று, தண்ணீர் குடித்து கொண்டிருக்கிறார்களாம்.
இளைஞர்கள் சிலர் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து ரயில்களில் ஏறி அதனை குடித்து வருகிறார்களாம். இதனை அறிந்த சுவிட்சர்லாந்திலன் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கு தீர்வு காண முடிவெடுத்துள்ளார்கள். எனவே ரயில்வே துறை அதிகாரிகளுடன் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.