Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யோ 1 ரன்னில் போச்சே..! தரையில் உட்கார்ந்து கதறி அழுத பாக் வீரர்…. வைரலாகும் வீடியோ.!!

பாகிஸ்தான் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சதாப் கான் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது..

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12இல் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ட்டு முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 130 ரன்கள் குவித்தது இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.. அதன்பின் இப்திகார் அகமது 5 ரன்னில் நடையை கட்டினார். அப்போது பாகிஸ்தான் அணி 7.4 ஓவரில் 36/ 3 என்று இருந்தது. அப்போது சதாப் கான் மற்றும் ஷான் மசூத் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடி வந்த நிலையில், 14வது ஓவரில் சதாப் கான் (17)  சிக்கந்தர் ராசா ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 13.4 ஓவரில் 88 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது.

இதையடுத்து அந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். கடைசியில்  முகமது நவாஸ் மற்றும் முகமது வசீம் இருவரும் வெற்றிக்கு போராடினர். இறுதி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட முகமது நவாஸ் முதல் பந்தில் 3 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் முகமது வசீம் ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தில் 1 ரன் எடுக்க நான்காவது பந்து டாட் ஆனது.

பின் ஐந்தாவது பந்தில் நவாஸ் தூக்கி அடித்து அவுட் ஆனார். பின் கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது உள்ளே வந்த ஷாஹீன் அப்ரிடி அடித்துவிட்டு ஓடும்போது ரன் அவுட் செய்யப்பட்டார். 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே. அத்துடன் அத்துடன் பாகிஸ்தான் தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் அரையிறுதி வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சதாப் கான் கண்ணீர் விட்டு அழுதார்.. 17 ரன்களில் அவுட்டான அவர் டிரெஸ்ஸிங் ரூம் செல்லும் வழியில் நின்று போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.. எப்படியாவது கடைசி நேரத்தில் வென்று விட மாட்டோமா என்ற பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததும் அந்த இடத்திலேயே முட்டி போட்டு உட்கார்ந்து தரையை பார்த்து கண் கலங்கினார். அவரை அந்த அணியில் உள்ள ஒருவர் வந்து சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

https://twitter.com/nottKainat/status/1585866794350149632

Categories

Tech |