Categories
அரசியல்

அய்ய்யயோ…! தமிழக சுகாதாரத்துறையில் அதிர்ச்சி …..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  அவர் தலைமையில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனால் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை விரட்டிட தமிழக சுகாதாரத்துறை நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் குடும்பம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் உள்ள அவருடைய மனைவி, மகன், மாமனார், மாமியார் என அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

Categories

Tech |