Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அய் ஜாலி ஜாலி…. இனி மெட்ரோ ரயில் நிற்கும்… சென்னையில் புது அறிவிப்பு ..!!

சென்னையில் உள்ள தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறித்து ,  சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கட்டம் 1-ன் நீட்டிப்பு திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை  வரை 9 கி.மீ.  பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதாவது திருவொற்றியூர் தேரடி மற்றும்  விம்கோநகர் பணிமனை  மெட்ரோ ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில்,  மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து,  அவர் அளித்த ஒப்புதலின்படி மெட்ரோ ரயில் நிலையங்களில் 13.03.2022 நேற்று முதல்  பயணிகள் பயணிக்க  ரயில் இயக்கப்படும் என்றும், இவ்விரு ரயில் நிலையங்களில்  மெட்ரோ ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்படுகிறது.

மேலும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும்  பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் தொடங்கப்பட்ட  நாளில் இருந்து  இந்த மாதம் 11 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இது சென்னை மெட்ரோ ரெயில்நிறுவனத்திற்கு  ஒரு மைல் கல்லாகவே இருக்கும் என்று  இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |