அரச மலைப்பகுதியில் சுறை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பொதுமக்கள் கடும் வெயிலில் வாட்டி வதங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென எதிர்பாராமல் காரையூர் அருகிலுள்ள அரசமலை சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து, சாலை ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியுள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் ஆனந்தம் அடைந்துள்ளனர்.