அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படும் சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கூடிய குழு புகைப்படம் (Combined Photo of Parents)
குடியிருப்பு சான்று (Residence Proof)
பெற்றோரின் கருத்தடை சான்றிதழ் (Sterilization Certificate of Parents)
முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate of First Children)
இரண்டாவது குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (Birth Certificate of Second Children)
குடும்ப அட்டை / ஆதார் அட்டை
விண்ணப்பிக்கும் முறை:
முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும்.
Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள New User Option-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு நீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP (One Time Password) எண் வரும், அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Login மற்றும் Password-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும்.
Login செய்த பினனர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து No Male Child Certificate என்ற Option- ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டானை கிளிக் செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் முடித்த பிறகு, Register CAN என்ற பட்டனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்ப வேண்டும்.
இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number Message-ஆக வரும், அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை உள்ளீடு செய்து Proceed பட்டானை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: நீங்கள் கொடுத்த தகவல்களை மாற்ற விரும்பினால் Edit CAN Detail பட்டனை கிளிக் செய்து மாற்றி கொள்ளவும்)
அடுத்து நீங்கள் CAN Register பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த முகவரி விபரங்கள் வந்துவிடும். அதில் Applicant Detail பகுதியில் தந்தையின் பெயர், தாயின் பெயர் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும்.
அதன் பிறகு Add Child Details பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது குழந்தையின் பெயர், பிறந்த தேதியை நிரப்பி, பெற்றோர்களில் யாருக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் தேதியையும் தெளிவாக கொடுக்க வேண்டும்.
நிரப்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறைக்கு சரிபார்த்த பின்னர் Submit பட்டாணி கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் List of Documents பகுதியில் Combined Photo of Parents, Residence Proof, Sterilization Certificate of Parents, Birth Certificate of First Children, Birth Certificate of Second Children, Family/Smart Card போன்ற Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அலல்து PDF (200 KB) அளலை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும்.
அடுத்து Self Declaration Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதலை Scan செய்து Upload செய்ய வேண்டும்.
அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்த பினனர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ. 60 கட்ட்நாம் செலுத்த வேண்டும்.
அடுத்து அரசாங்க அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் வங்கத்து சேரும், அதன் பின் TNeGA Login செய்து ஆண் குழந்தை இல்லாத சான்றிதழ் (No Male Child Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் இணைய முகவரி:
https://www.tnesevai.tn.gov.in/
பயன்கள்:
❖அரசாங்கத்தின் மூலம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் பெற பயன்படுகிறது.