தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ உயர் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய அரசாணை பிறப்பித்து இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
இதனையடுத்து 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.