உள்நாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மறுசீரமைப்பு என்று கூறி தேங்காய் பட்டினம், குளச்சல், சின்னமுட்டம் என மூன்று பகுதிகளாக பிரித்து மீனவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அரசாணை 122-ஐ ரத்து வேண்டும்.
மீன்வர் நல வாரியத்தை செயல்படுத்தி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு உள்நாட்டு மீனவர் சங்க கூட்டுறவு தலைவர் ஜேசுராஜன் தலைமை தாங்கினார். மேலும் ஊர் தலைவர்கள் ஜெயம், ஜெயசீலன் உள்நாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மைய தலைவர் அந்தோணி, நிர்வாகிகள் சகாயராஜ், வேல்முருகன் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.