Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக நாளை( வெள்ளி கிழமை) வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

இந்த முகாம் தனியார் துறை நிறுவனங்கள், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முகத்தேர்வு வைத்து அதன் மூலம் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கல்வி சான்றிதழுடன் வந்து சேர்ந்து கொள்ளலாம். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி பெற்று பணி நியமன பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நீக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |