பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு அவருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.
பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று அறிவித்தார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம் என்றும், செப்டம்பர் 17 சமூகநீதி நாளன்று தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்..
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்ததற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார்..
தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு பெரியாருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு. பாராட்டுக்குரிய செயல்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 6, 2021