Categories
மாநில செய்திகள்

அரசின் கட்டுப்பாடு காரணமாக மாணவர் சேர்க்கை குறைவு …!!

அரசின் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற்று முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் நடத்தப்பட்டது. அதில் நிரப்பப்படாத காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் சேர்வதற்கு சம்பந்தப்பட்ட மாணவரின் வீடு, பள்ளி ஆகியவற்றிற்கு இடையேயான தூரத்தை அரசு குறைத்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது மாற்றப்பட்டு ஒரு கிலோ மீட்டர் என குறைக்கப்பட்டு உள்ளது.

இதனால் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. திருச்சியை பொறுத்தவரை 313 தனியார் பள்ளிகள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் வருகிறது. இதில் 4,207 ஏழை மாணவர்களுக்கும் இடமளிக்கப்படும், இதில் முதல் கட்டமாக முடிவில் ஆயிரத்து 668 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டனர், மீதம் 2,539 இடங்கள் காலியாகவே உள்ளது. இரண்டாம் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கு 819 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாகவும் சேர்க்கை தேர்வில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் கிட்டத்தட்ட 2000-ற்கும் அதிகமாக இடங்கள் காலியாக உள்ளது தெரிய வருகிறது.

Categories

Tech |