நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தொற்று அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அரசு நோக்கமல்ல, முடியாதே தமிழக அரசு தான் என்று தெரிவித்தார்.
மேலும் ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஐன் தயாரிக்க தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதனையே பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கூறுகிறது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.