சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் முப்படை தலைவர் பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் மரியாதை செலுத்துதல், பொது மக்களிடம் மனுக்கள் பெற்று முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் தீர்வு காணுதல் போன்ற புகைப்படங்கள் இருந்தது.
மேலும் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு ராணுவத்தினர் விருது வழங்கியது, சாதனைகள் குறித்த புகைப்படங்கள், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள், ஆவின் பால் விலை குறைப்பு, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு புகைப்படங்களை பார்த்து ரசித்தனர்.