சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சீரணி கலையரங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனையடுத்து வீட்டுமனை பட்டா, முதிர்கன்னி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய 24,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு வழங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதனையடுத்து உதவி கலெக்டர் மஞ்சுளா, மோகனூர் எம்.எல்.ஏ. ராமலிங்கம், எம்.பி.கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மோகனூர் தாசில்தார் தங்கராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் கைசாலம்,கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு தலைவர் சரவணகுமார் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.