இந்தியாவி உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக தேசிய ஓய்வூதியத்திட்டம் இருக்கிறது. இவற்றில் ரூ.50,000 முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு திட்டம்
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் முதலீடு ரூபாய்.100. வட்டி விகிதங்கள் கோல் ஆல் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுடைய தகுதியினை சரிபார்த்த பின் இத்திட்டத்தில் முதலீடு செய்யவும்.
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா
வங்கியில் கணக்கில்லாத நபர்களுக்கு இத்திட்டம் நிதியினை வழங்குகிறது. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும். இவற்றில் குறைந்தபட்சம் 18 வயது முதல் கணக்கை துவங்கலாம்.
அடல் பென்ஷன் யோஜனா
இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு ரூபாய்.1000 -ரூ.5000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும். 18-40 வயது வரை இருப்பவர்கள் இத்திட்டத்தில் பங்களிக்கலாம்.
பிஎம் வய வந்தனா யோஜனா
60 வயதிற்கு அதிகமான மூத்தகுடிமக்களுக்கான சிறந்த திட்டம் இது. 10 வருடங்கள் கால அளவு கொண்ட இத்திட்டத்தில் 8 சதவீதம் முதல் 8.3% வரை வட்டி வழங்கப்படுகிறது.
சவரன் கோல்டு பாண்டுகள்
இவற்றில் பத்திரம் டிமேட் வடிவில் கிடைக்கிறது. அத்துடன் இதில் டிடிஎஸ் பொருந்தாது.
அரசு பத்திரங்கள்
பத்திரங்களை பொறுத்து முதிர்வுகாலம் 91 தினங்கள் முதல் 40 வருடங்கள் வரை இருக்கும். ரெப்போ கடன்களை வாங்கும் போது இதை பிணையமாக வைத்துக் கொள்ளலாம்.