Categories
உலக செய்திகள்

அரசின் தடையை மீறிய மக்களால்…. நூற்றுக்கணக்கான உயிர்கள்… பறிபோன பரிதாப சம்பவம்…!!

புத்தாண்டின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலியில் பொதுமக்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் போன்றவைகளை பாதுகாக்கும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. எனினும், அரசின் இந்த சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பொதுமக்கள் பலரும் நடந்துகொண்டுள்ளனர். இதனால் பல உயிர்கள் பறிபோயுள்ளது. அதாவது, இத்தாலியின் தலைநகர் ரோமில் புத்தாண்டு கொண்டாடபட்டது.

அப்போது மக்கள் பலரும் பட்டாசுகளை வெடித்து வான வேடிக்கைகளை நிகழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக சில தெருக்களில் உள்ள சாலைகள் முழுவதிலும் கொத்து கொத்தாக நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து கிடந்துள்ளன. இச்சம்பவம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து பறவைகள் கொத்தாக இறந்து கீழே விழும் காட்சிகள் வீடியோவாக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |