செய்தி மக்கள் தொடர்பு துறையின் சென்னை மற்றும் திருச்சி மண்டல செய்தி தொடர்பு துறை மண்டல இயக்குனர்கள், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர்களுடன் பணி ஆய்வு கூட்டம் மாநில செய்தி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் பேசினார். அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலங்களாக பிரித்து சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு செய்தி தொடர்பானது அரசுக்கும், மக்களுக்கும் இடையேயான பாலமாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் விதத்தில் தமிழக மக்களுக்காக பல்வேறு விதமான நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நலத்திட்ட உதவிகளை செய்தி நிறுவனங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது. இதனையடுத்து மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்கள் சந்திப்புகளை ஏற்பாடு செய்து அரசின் திட்டங்களை தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு சேர்க்கின்றனர். இதேபோன்று மக்கள் பிரச்சனைகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் செய்தி நிறுவனங்கள் கொண்டு சேர்க்கும். தமிழகத்தில் 75-வது சுதந்திர தின விழாவது சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தியாகிகளின் படங்கள் விடுபட்டிருப்பின் கலெக்டருடன் ஆலோசனை நடத்தி உடனடியாக புகைப்படங்களை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மணிமண்டபங்கள், அரங்கங்கள் மற்றும் நினைவங்கள் போன்றவற்றைகள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவகங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக வழிகாட்டு பலகைகளை வைக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள நினைவகங்களையும் சுத்தம் செய்து தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவிக்கும் வகையில் புதுப்பிக்க வேண்டும். மேலும் சர்வதேச அளவிலான 44-வது தேர்வு போட்டி குறித்த விழிப்புணர்வை தமிழக முழுவதும் எடுத்துச் சென்ற செய்தி தொடர்பு துறையினரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியதாகவும் கூறினார்.