Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசின் தீவிர முயற்சி…. தாயகம் திரும்பிய மாணவர்கள்…. இனிப்பு வழங்கி வரவேற்பு…!!

உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் காரணமாக 5 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத் மற்றும் பயாஸ் ஆகிய 5 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது.

இந்த மாணவர்கள் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு நகரசபை தலைவர் ஹபிபுர் ரஹ்மான், துணைத் தலைவர் ராசையா உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

Categories

Tech |