Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில்… ஒரு பெண் படுகாயம்… பொதுமக்கள் கோரிக்கை….!!!!

அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ஊராட்சி கடந்த 20 வருடங்களுக்கு முன் அரசு சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் அப்பகுதியில் வசித்த 45 வயது உடைய சேகர், அவருடைய மனைவி 42 வயதுடைய செல்வி மற்றும் இவர்களின் மூன்று குழந்தைகள் வீட்டின் வெளியே வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் செல்வி படுகாயமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் செல்வியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சேகர் மற்றும் 3 குழந்தைகளையும் உயிர் பிழைத்தார்கள். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முகமதுஅலிபேக், தேவராஜன், ஊராட்சி தலைவர் ராமையா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Categories

Tech |