பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் 23 வகையான ஆவணங்களை இ-சேவை மையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இ- சேவை மையம் மூலமாக தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இது தொடர்பாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதல்களான நன்னடத்தை சான்று, ஆளறி சான்று, புலம்பெயர்தல் சான்று, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்று, மற்றும் மாற்றுச் சான்றிதழ் போன்ற 23 வகையான சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.