75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது.
அதில் பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். கட்சி ஒட்டு மொத்த அமைப்பும் ஒரே குடும்பத்துடன் இருக்கக்கூடாது. ஒரு கட்சியை ஒரு குடும்பம் வழிநடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. பல தலைவர்கள் தங்கள் சிந்தனைகளில் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள். அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற வேண்டும். கடமையை பொறுப்போடு செய்தால் அனைத்து மக்களும் பலமாக இருக்க முடியும். நமது உரிமைகளை பாதுகாக்க கடமை என்கிற பாதையில் முன்னேறி செல்ல வேண்டியது அவசியம் என்று பேசியுள்ளார்.