வைகோ எடுத்துள்ள திடீர் முடிவால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போது திமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவால் பதவி பெற்ற அதன் தலைமை செயலாளர் வைகோவை வைத்து அந்த கட்சி சற்றே தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரியவிருக்கும் மோடிக்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது , இந்த மண்ணுக்கு எல்லா மக்களும் தேவை எனவும் எல்லா நிறமும் எல்லா மதமும் தேவை எனவும் எதையும் வேண்டாம் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் கூறினார்.
நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை எதிர்க்க வில்லை எனவும் கூட்டணி என்ன முடிவு எடுக்கிறதோ அதுவே என்னுடைய முடிவாகவும் இருக்கும் எனவும் அவர் கூறினார்.இதன் மூலம் மோடியின் வருகைக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும் வைகோ தற்போது சற்றே தணிந்து செல்வதற்கு திமுக தலைமை தான் காரணம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும் வரும் காலங்களில் தமிழக அரசு சிக்கலில்லாமல் காலம் கழிக்க வேண்டும் என்றால் பாஜகவுடன் கூட்டணி வைத்து தான் ஆக வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.