தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார். தொடர்ந்து அரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிட்ட ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று அவர் பேசியுள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் ஆந்திர அரசியலில் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது