Categories
தேசிய செய்திகள்

அரசியலில் களமிறங்கிறாரா மிதாலி ராஜ்?…. பாஜக தலைவருடன் சந்திப்பு… வெளியான பரபரப்பு தகவல்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநில பாஜக சார்பில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு முக்கிய பிரபலங்களிடம் பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்த ஆதரவு திரட்டி வருகின்றனர். வாக்குகளை முன்வைத்து நடத்தப்படும் பாஜக தேர்தல் யாத்திரையில் பிரபலங்களின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றதாக அறிவித்தபோது, பிசிசிஐ நிர்வாகத்தில் பொறுப்பேற்க விருப்பம் உள்ளதையும் சுட்டி காட்டினார். இருப்பினும் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் அரசியலில் களமிறங்கும் நகரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவா மிதாலி ராஜ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மிதாலி ராஜ் மரியாதை நிமித்தமாகவே ஜெபி நட்டாவை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |