தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக ஓவியா அரசியலில் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் நடிகை ஓவியா இழுத்துள்ளார்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக ஓவிய பிரசாரம் செய்ய, ஐ பேக் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தே திமுக பேச்சாளர் ஆக ஓவியாவை பணியில் அமர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.