தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழி படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபகாலமாக பிரகாஷ்ராஜ் அரசியல் மாற்றங்களை பற்றித் தீவிரமாக பேசி வருகிறார். அவ்வபோது பாஜக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்-ஐ பிரகாஷ்ராஜ் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க சந்திரசேகர் ராவ் அளிப்பதாகவும் இதற்காகவே இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மாநிலங்களவை யில் 3 இடங்கள் காலியாக இருக்கிறது. அதில் ஒரு இடத்தை பிரகாஷ்ராஜுக்கு கொடுக்க சந்திரசேகரராவ் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது.