Categories
மாநில செய்திகள்

அரசியலில் பக்குவமாக செயல்படுகிறேன் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால்  மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவின் நலத் திட்டங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை குறைகூறிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் ராஜேந்திர பாலாஜி  கொரோனா காரணமாகத் தான் ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் தான் உணர்ச்சி மிகுந்த சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து, அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |