நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், “இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார். விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார்” என்று கூறினார்.