நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். இந்நிலையில் அரசியலில் தான் போட்டியிடப்போவதில்லை என விஷால் கூறியுள்ளர்.
திருப்பதியில் நடைபெற்ற ‘லத்தி’ ப்ரொமோஷனில் பேசிய அவர், அரசியலில் இருந்து MLAவாக பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட, சினிமாவில் போட்டியிட்டு அதில் ரசிகர்களை திருப்திப்படுத்தி, என்னால் முடிந்த சமூக சேவையை எனது அறக்கட்டளை மூலம் செய்து வருகிறேன். அதனால், அரசியலில் போட்டியிடுவதில்லை. சினிமாவில் மட்டுமேபோட்டியிடுவேன் என்றார்.