அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக முதன் முறையில் தன் தாயிடம் கூறியபோது அவர் எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் “உன்னுடைய செயல்களுக்கு நீதான் பொறுப்பு. எப்போதும் நேர்மையும், குணமும் மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று தாயார் வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், தன்னுடைய கல்லூரி காலங்களில் தான் சந்தித்த ஜாதிய ஒடுக்குமுறை தான் தன்னை அரசியலுக்கு நுழைவதற்கு காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் .