நடிகர் ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30 ஆம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனையடுத்து அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாமல் இருந்த ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை வருகின்ற 30ஆம் தேதி சந்திக்கிறார். இதனை ரஜினி ரசிகர்கள் #RajinikanthpoliticalEntry என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் எண்ட்ரி குறித்து அறிவிப்பு வரும் என்றும், இதனை விமர்சித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.