ரஜினி கட்சி தொடங்குவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கட்சி அலுவலகமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தமிழருவி மணியனுக்கும், அர்ஜுன மூர்த்திக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பச்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.