கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அதில் அனைத்து கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்குக் கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல் அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற போது எடுத்த புகைப்படம் மற்றும் விருதை தாயாரிடம் கொடுத்து அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து கலைமாமணி விருது பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு வருவீங்களா? என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த சிவா, “கண்டிப்பாக வரமாட்டேன், சமூக பிரச்சனையை தன்னுடைய படத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறேன். விவசாயிகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.