Categories
மாநில செய்திகள்

அரசியலை விட்டு விலகத் தயார்… அமித்ஷாவுக்கு நாராயணசாமி சவால்…!!!

புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதன் பிறகு புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்தார். இதனையடுத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு 15,000 கோடி நிதிகொடுத்ததாக கூறியதை அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி மறுத்துள்ளார். மேலும் அவர் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்றும், தன்மீது அமிர்ஷா கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் அரசியலை விட்டு விலகத் தயாராக உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |