ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அதிமுக மற்றும் திமுக தேர்தல் பிரசாரத்தில் கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் “ஊழல் குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தெரிவித்தது பொய் சொல்வதாக கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபித்துவிட்டால் அமைச்சர் வேலுமணி அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை வேலுமணி ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.