Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியல் அடையாளத்திற்கு பாஜக முயற்சி” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்…!!!

அரசியல் களத்தில் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாஜக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் திருத்தேர் திருவிழாவை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக மீது ஆதாரமில்லாமல் குறை கூறினால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதை பாராட்டியிருந்தால் நடுநிலையோடு செயல்படுகின்ற ஒரு கட்சி என்று நாங்கள் எடுத்துக் கொள்வோம். ஆகவே அரசியல் களத்தில் அவர்களும் இருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகத் தான் நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |