தமிழ்நாடு ஆளுநர் என்ற புதிய பொறுப்பில் வெற்றிகரமாக செயல்பட ஆர்.என்.ரவிக்கு வாழ்த்துகள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி..
அதனை தொடர்ந்து இன்று காலை ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. இதனால் தமிழகத்தின் 26 ஆவது புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றுள்ளார்..
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி, வைகோ, ஜி.கே வாசன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, தனபால், வைத்திலிங்கம், மத்திய இணையமைச்சர் எ.ல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில், தமிழ்நாடு ஆளுநர் என்ற புதிய பொறுப்பில் வெற்றிகரமாக செயல்பட ஆர்.என்.ரவிக்கு வாழ்த்துகள். அவரின் நிர்வாகம் & அரசியல் அனுபவத்தால் தமிழ்நாடு பலனடையும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Greeted His Excellency Shri. R N Ravi avl, who took charge as the Governor of Tamil Nadu!
On behalf of @BJP4TamilNadu we wish him all success in his new responsibility.
We are very confident our state will benefit from his vast administrative & political experience! pic.twitter.com/C6rEHca8y5
— K.Annamalai (@annamalai_k) September 18, 2021