Categories
அரசியல்

அரசியல் ஆக்காதீங்க…! ”முடிவுக்கு கட்டுப்படுவோம்”… அது வேற சப்ஜெக்ட்…!!

வேளாண் துறைக்கு பட்ஜெட் போடுவதை விட பட்ஜெட் மூலமாக என்ன சாதிக்க வரீங்க ? என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சொன்ன கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கை பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னது, அதுபோல தங்க நகை யாரெல்லாம் கடன் வாங்குகிறார்களே…  அவர்களுக்கு தீர்வு கொடுப்பேன் என்று சொன்னது, அது எதுவுமே செய்யவில்லை. இப்போது முதலமைச்சர் சொல்கிறார் நாங்கள்  இதை பண்ணி விட்டோம் என்று.. என்ன பண்ணிட்டாங்க ? அவரால் என்ன செய்ய முடிந்தது ?

அதாவது சட்டப்பேரவையில் நம்ம பார்த்தோம்….  ஆக்கப்பூர்வமான விவாதம் இல்லாமல், ஒருத்தர் இன்னொருவரை புகழாரம் சொல்லிக்கொண்ட புகழார கூட்டமாகத் தான் நாம் பார்க்கிறோமே, தவிர ஆக்கபூர்வமாக நாம் பார்க்கவில்லை. உதாரணத்திற்கு இவர்கள் சொல்கிறார்கள் நாட்டிலேயே முதன்முதலாக வேளாண் பட்ஜெட்டை நாம போட்டுள்ளோம். அது தவறு கிடையாது, வேளாண்மைத்துறைக்கு பட்ஜெட் வேண்டும். ஆனால் 2011 கர்நாடகம், அப்புறம் ஆந்திரா எல்லாம் போட்டுள்ளார்கள்.  வேளாண் துறைக்கு பட்ஜெட் போடுவதை விட பட்ஜெட் மூலமாக என்ன சாதிக்க வரீங்க ? என்று சொல்லவேண்டும்.

ஐந்து வருடத்தில் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் இந்த மாதிரி சொன்னால் ஏற்று கொள்ளலாம். சும்மா ஒரு பட்ஜெட்போட்டுட்டு நாங்கள்தான் முதலில் போட்டோம், இந்த மாதிரி தான் அவர்களுடைய எல்லா நடவடிக்கைகளும் இருக்கிறது. மக்களுடைய வாழ்க்கையை தரத்தை உயர்த்துவதற்காக இந்த அரசு பாடுபட்ட மாதிரி தெரியவில்லை, அதுதான் எங்களுடைய கருத்து.

T23புலியை புடித்து பற்றிய உங்களின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு…. 

இது வந்து நுட்பமான சப்ஜெக்ட். ஒரு புலியை ஆட்கொல்லி  என்று சொல்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முறை இருக்கிறது, வனத்துறையினர் செய்கிறார்கள். நம்மைப் பொருத்தவரை எந்த வன விலங்குகளையும் நாம் கொல்லக் கூடாது என்பது தான் நமது நாட்டில்… ஆனால் ஆட்கொல்லி என்று கூறிய பிறகு வனத்துறை செய்கின்ற காரியத்திற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும், அதனால் இந்த விஷயத்தை நாம் அரசியல் ஆக்காமல் சப்ஜெக்ட் வல்லுனர்கள் எடுக்கின்ற முடிவு நல்ல முடிவாக தான் இருக்கும், அதற்கு கட்டுபடுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |