Categories
சினிமா

“அரசியல் என்னை விட்டு விலகவில்லை”…. சிரஞ்சீவி வெளியிட்ட பதிவு…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, இப்போது மோகன் ராஜா இயக்கியுள்ள லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட் ஃபாதர் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சிரஞ்சீவி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவு பலரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவற்றில் “நான் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன். எனினும் அரசியல் என்னை விட்டு விலகவில்லை” என பேசியுள்ளார்.

சென்ற 2008 ஆம் வருடம் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கி 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாநிலம் முழுதும் போட்டியிட்டு சிரஞ்சீவி உள்பட 18 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். சில ஆண்டுகள் அரசியலில் இருந்தபிறகு கட்சியை கலைத்து காங்கிரசில் இணைத்துக்கொண்டார். அதன்பின் ராஜ்யசபா எம்பியாக சிரஞ்சீவி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அரசியலை விட்டு விலகியிருந்த சிரஞ்சீவி மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

இருந்தாலும், அரசியல்வாதிகளுடன் நல்லுறவு வைத்துள்ள அவர் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் சில கூட்டங்களில் பங்கேற்று வந்தார். அத்துடன் தன் தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். இந்த நிலையில் சிரஞ்சீவியின் இந்த ஆடியோ பதிவு தற்போது வைரலாகி பலரையும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் சிலர் இவர் நடித்துள்ள காட் ஃபாதர் திரைப்படத்தின் வசனமாக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |