“நான் பிறந்த போது குலக்கல்வியை எதிர்த்து போராடினோம், இன்று நீட்டை எதிர்த்து போராடுகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “கல்லூரி படித்த போது நாடகம், திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன் நான்.
அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள். நான் அரசியலில் தான் இருந்திருப்பேன். அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது” என்று அவர் பேசியுள்ளார்.