ஜவுளிக்கடைகளில் அரசியல் கட்சியினரின் சின்னம் பதித்த வேஷ்டி மற்றும் சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி சந்தையில் கட்சி கரைகள் போட்ட வேஷ்டிகள் மற்றும் சின்னங்கள் பதித்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுவர். இதனால் தங்களது ஆதரவாளர்களுக்கு வேஷ்டிகள் மற்றும் சேலைகளை வேட்பாளர்கள் வாங்கி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஜவுளி உள்பட அனைத்து வியாபாரங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் சமயத்தில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.