Categories
தேசிய செய்திகள்

அரசியல் கட்சி தலைவர்களை மேடையில் பேச அனுமதிக்கமாட்டோம் ….!!

எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் மேடைகள் பேச அனுமதிக்க மாட்டோம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி சாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில் டிசம்பர் 3-ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதற்கு முன்னராக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் விவசாயிகள் புராரி மைதானத்திற்கு சென்று அங்கு தங்கள் போராட்டத்தை தொடரலாம் என உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா நிபந்தனை விதித்தார்.

Categories

Tech |