முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நேற்று காலை முதல் மாலை வரை மொத்தம் பதினோரு மணி நேரம் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியது குறித்து அதிமுக கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் நியாயத்தின் பக்கம் நின்று, எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் ஆதரவாக நின்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அதிமுக கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மற்ற எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.