இந்திய கார்ட்டூன் வரைவாளரான கே. சங்கர பிள்ளை குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். கடந்த 1902-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் சங்கர பிள்ளை பிறந்தார். இவர் ஒரு சிறந்த கேலிச்சித்திர வரைவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
இவர் அரசியல் தொடர்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் சங்கர் வீக்லி என்ற ஆங்கில இதழை நடத்தினார். இதனையடுத்து சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம் மற்றும் சங்கர்ஸ் வீக்லி குழந்தைகள் புத்தக அறக்கட்டளை என்ற இரண்டு அமைப்புகளை தொடங்கினார்.
இந்நிலையில் சட்டப்படிப்பு படித்த கே. சங்கர பிள்ளை இலக்கிய விருது, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருது, பத்மஸ்ரீ விருது போன்ற விருதுகளை வாங்கியுள்ளார். இதனையடுத்து கேலி சித்திரங்கள் வரைவதில் மிகவும் ஆர்வமாக இருந்த சங்கரப்பிள்ளை பாம்பே குரோனிக்கல், சங்கர் ஃப்ரீ பிரஸ் ஜெனரல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் சித்திரங்களை வரைந்துள்ளார்.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் காரணமாக சங்கர் வீக்லி வெளியிடுவதை சங்கர பிள்ளை நிறுத்திக் கொண்டார். மேலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், கதைகள் மற்றும் ஓவியங்கள் போன்றவற்றை படைத்த சங்கரப்பிள்ளை கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி மறைந்தார்.