தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேச்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களின் 110 பேர் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பது அரசியல் கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் வெற்றி குறித்து பலரும் விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம். விஜய்க்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் வாழ்த்துக்கள் என்று விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர் செல்வாக்கு தான் முக்கியம் என்றால், விஜய் மக்கள் இயக்கத்திற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால், உங்கள் கட்சிக்கு ஏன் உள்ளூர் செல்வாக்கு இல்லை. அப்படி உள்ளூர் செல்வாக்கு இல்லாத நபரை தான் வேட்பாளர்களாக களம் இருக்கிறீர்களா? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க சீமானுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் மன்னிப்பு கேள் என்று கொதித்துள்ளனர். இதுகுறித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் போஸ்டரில், “அரசியல் செல்லாக்காசு… ச்சீ சீமானே.! எல்லா தேர்தல்களிலும் அடி வாங்கும் உனக்கு தளபதி வெற்றி பற்றி கூற என்ன தகுதி இருக்கிறது? உடனடியாக மன்னிப்பு கேள். இது எச்சரிக்கை அல்ல கட்டளை” என்று கண்டன போஸ்டர் ஓட்டி வருகின்றனர்.