அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை ஆளுங்கட்சியான திமுக அரசு எதிர்கொள்ளும். ஆதாரம் இருந்தால் சட்டப்படி அணுகட்டும் என்று கூறியுள்ளார்.