Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் நெருக்கடி… ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டசபை கூட்டம்… கவர்னர் அறிக்கை…!!

அரசியல் நெருக்கடி காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது என்று கவர்னர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோனதை அடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் மற்றும் 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கும் நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட்  தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி, கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி கவர்னருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் அசோக் கெலாட் நேற்று மூன்றாவது முறையாக கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது சட்டசபையை கூட்டுவது பற்றி வலியுறுத்தியதாக புறப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூட்டப்படும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ” ராஜஸ்தான் சட்டமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆகஸ்ட் 14 முதல் கூட்டும் அமைச்சரவை அனுப்பிய திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அந்த அறிவிப்பில் எழுதப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்ற அசோக் கெலாடின் முந்தைய நிலைப்பாட்டின் முன்னேற்றமாக இது காணப்படுகிறது.

Categories

Tech |