கேரள மாநிலம் பாலக்காட்டில் அரசியல் கொலைகள் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்குச் சென்று திரும்பிய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த சுபைர்என்பவர் தந்தை கண்முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பாலக்காடு நகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீனிவாசன் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வாறு தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.